உக்குரஸ்ஸபிட்டிய: Green Star Champion League 2018 » Sri Lanka Muslim

உக்குரஸ்ஸபிட்டிய: Green Star Champion League 2018

Champions team LANKASHARE

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

உக்குரஸ்ஸபிட்டிய கிரீன் ஸ்டார் விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Green Star Champion League 2018 கிரிக்கெட் சுற்றுப்போட்டி டிசம்பர் 5, 6, 7 ஆம் திகதிகளில் கடுகாஸ்தோட்டை ராஹுல கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இச் சுற்றுப் போட்டியின் முக்கிய அம்சம் யாதெனில் இந்திய ப்ரீமியர் லீக் (IPL) போட்டிகளில் போன்று ஒவ்வொரு அணிக்குமான வீரர்கள் ஏலத்தில் ( Auction) விடப்பட்டு அணிகளின் உரிமையாளர்களால் பொருத்தமான வீரர்கள் வாங்கப்பட்டு அணிகளில் சேர்க்கப்பட்டமையாகும்.

மத்திய மாகாணத்தில் இவ்வாறான இந்திய IPL தொடரைப் போன்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்று நடைபெற்றமை இதுவே முதல் தடவை ஆகும்.

சுமார் 06 லட்சத்திற்கு அதிகமான செலவில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இச் சுற்றுப் போட்டியில் சிறந்த 10 அணிகள் போட்டியிட்டதோடு இறுதிப் போட்டியில் மில்ஹாம் அணுசரனை வழங்கிய ரிஷாட் தலைமையின் கீழ் போட்டியிட்ட லங்கா ஷெயார்ஸ் அணி செம்பியன் கின்னத்தை வெற்றி கொண்டது.

இச் சுற்றுப் போட்டியை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க அர்ப்பணிப்புடன் பங்களித்த கிரீன் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் தலைவர் ரிபாஸ், செயலாளர் இம்ரான், பொருளாளர் அப்துல்லா றாஸிம், றஸீஸ் ஆகியோருக்கும் கழகத்தின் ஏனைய அனைத்து அங்கத்தினர்களுக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Champions team LANKASHARE GSCL TROPHY ILIYAS RIGHT LOYAL MADRIED TEAM BEST BATSMEN GIVEN BY ALHAJ FAREES

Web Design by The Design Lanka