உடரட்ட மெனிக்கே நாவலபிட்டியில் தடம்புரண்டது. - Sri Lanka Muslim

உடரட்ட மெனிக்கே நாவலபிட்டியில் தடம்புரண்டது.

Contributors

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே இரயில் தடம் புரண்டுள்ளது.

நாவலபிட்டி ஜயசுந்தரவோவிட்ட பகுதியிலே இன்று (30) மதியம் 12.30 மணியளவில் தடம்புரண்டுள்ளதுடன் இதுவரையில் மூன்று தடவைகள் குறித்த இடத்திலே இரயில் தடம்புரண்டுள்ளது.

இரயிலின் பின் எஞ்சினே தன்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளதால் குறித்த எஞ்ஜின் பகுதி தவிர்ந்த ஏனைய பெட்டிகள் நாவலப்பிட்டி இரயில் நிலையம் வரை சென்றுள்ளது.

தடம்புரண்ட பகுதியில் திருத்தப்பணி இடம்பெற்று வருவதாகவும் பணிகள் நிறைவடைந்தப்பின் இரயில் சேவை வழமைக்கு திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team