உண்மை நிலை தெரிய வரும் வரை றிஷாத் பதியூதீன் மீது அபாண்டங்களை சுமத்தாதீர்கள்..! - Sri Lanka Muslim

உண்மை நிலை தெரிய வரும் வரை றிஷாத் பதியூதீன் மீது அபாண்டங்களை சுமத்தாதீர்கள்..!

Contributors

தமிழ் ஊடகங்களும், ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும் நடந்துகொள்ளும் முறைமையை பார்த்தால், இவர்களை நம்பியா ரிசாட் பயணித்தார் என்று கேட்கவேண்டியுள்ளது…?

இஷாலினி தன்மீது தீமூட்டி 16நாட்களின் பின் இறந்தார் என்பது உண்மைதான்…ஆனால் அதற்கு சொல்லப்படும் காரணங்களில்தான் சந்தேகமுள்ளது…இஷாலினி தனக்கு தானே தீமூட்டி இறந்திருந்தாலும் அவர் 16நாட்கள் உயிரோடு இருந்துள்ளார், அந்தநேரம் பொலிஸ் வாக்குமூலம் பெற்றுள்ளது…அந்த வாக்குமூலத்தில் நானே தீமூட்டிக்கொண்டேன் என்பதை ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருந்த இஷாலினி எதனால் இப்படி நடந்துகொண்டேன் என்று கூறவில்லையென்று பொலிஸ் தரப்பும் கூறியுள்ளது. அதேநேரம் பிரேத பரிசோதனையில் அவர் சித்திரவதை செய்யப்படவில்லை, தாக்கப்பட்ட அறிகுறிகளும் தென்படவில்லையென்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. உண்மையில் முன்னால் அமைச்சர் ரிசாட்டின் வீட்டில் கொடுமைகள் நடந்திருந்தால், அந்த கோபத்தில் அவர் தீமூட்டியிருந்தால் நிச்சயமாக அந்த விடயங்களை பொலிசாரிடம் ஒப்புவித்திருப்பார்…யாரால் நாம் இந்த நிலைமையை அடைந்தோமோ அவர்களை பாதுகாக்கின்ற மனபக்குவம் யாருக்கும் ஏற்படாது….ஒரு மனைவியானவள்கூட கணவனால்தான் இந்த நிலமைக்கு ஆளானேன் என்று கூறுவதை கேள்விபட்டிருக்கின்றோம். அப்படியான உறவு இஷாலினிக்கும் ரிசாட் குடும்பத்துக்கும் கிடையாது என்கின்றபோது அவர் ஏன் ரிசாட்டின் குடும்பத்தை காட்டிக்கொடுக்கவில்லையென்ற உண்மையை நாம் அலசிஆராய்ந்து பார்க்கவேண்டும்.

இஷாலினி வேலைக்கு வந்து எட்டுமாதங்களே ஆகின்றனவென்று தெரிவிக்கப்படுகின்றது. அதற்குள் கொரோணா நோய் பிரச்சினையும் ஏற்பட்டதனால் அவர் ஊர் சென்று வருவதற்கோ அல்லது அவரது தாய் வந்து சந்திப்பதற்கோ சந்தர்ப்பங்கள் இல்லாதநிலையே ஏற்பட்டிருக்கும். ஊருக்கும் சென்றுவரமுடியவில்லை, தாயும் சந்திக்கவரவில்லையென்ற மனஉலச்சலை தன்மனதுக்குள் வைத்துக்கொண்டு, அந்த மனவேதனையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் அல்லது காட்டிக்கொள்ளாமல் வேலைகளை செய்துவிட்டு தனிமையில் இருக்கின்றபோது இப்படியான முடிவுகளை எடுப்பதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதை யாராலும் நிராகரிக்கவும் முடியாது. இதன் காரணமாக தற்கொலை முயற்சி செய்திருந்தாலும், இதற்கு காரணமான மனஉலைச்சல் ஏற்படுவதற்கு தன்னைவந்து பார்க்காத அல்லது கரிசனைகொள்ளாத தாய்தான் காரணம் என்பதை பொலிசாரிடம் இஷாலினி கூறமறுத்திருக்கலாம். அப்படிகூறினால் தனது தாய்க்கு ஆபத்துவந்துவிடுமோ என்றும் பயந்திருக்கலாம் என்றே என்னவேண்டியுள்ளது.

இந்த விடயம் நடந்தது பிரபலமான முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டில் என்பதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைக்கின்ற சில வங்குரோத்துபிடித்த அரசியல்வாதிகள், இஷாலினி வைத்தியசாலையில் இருந்த பதினாரு நாட்களும் பேசாமலேயே இருந்துவிட்டு இப்போது துடிக்கின்றார்கள். உண்மையில் இந்த அரசியல்வாதிகள் இஷாலினி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இப்படியான போராட்டங்களை நிகழ்த்தியிருந்தால் அந்தநேரம் இஷாலினியின் வாயினாலேயே உண்மைகளை பெற பொலிசார் முயற்சித்திருப்பார்கள் அல்லவா.? அப்போது இதற்கான விடை அன்றே கிடைத்திருக்கும். ஆனால் இஷாலினியின் தாயும், அவரது குடும்பத்தினரும்,இன்று இஷாலினியின் மீது பாசம் காட்டும் அரசியல்வாதிகளும் எப்படா இஷாலினி இறப்பார் என்று எதிர்பார்த்திருந்ததுபோன்று, இஷாலினி இறந்தபின்தான் அவர்களுடைய ஆட்டத்தை ஆரம்பிக்க துவங்கினார்கள் என்றே கூறவேண்டும். இப்போது இல்லாத பொல்லாத கற்பனை கதைகளை அவிழ்த்துவிட்டு மலையக மக்களின் காவலர்கள் நாங்களே என்று காட்டிக்கொள்வதற்காக தாண்டபமாடுகின்றார்கள். இது மனட்சாட்சிக்கு விரோதமானது என்பதை மலயகமக்களும் புரிந்துகொள்ளும் காலம் வெகுதூரமில்லையென்றே நம்பவேண்டும்.

இஷாலினி 16வயதுடையவராக இருந்தாலும் அவர் தோற்றத்தில் பெரியவராகவே காணப்பட்டுள்ளார். வயதை கவணத்தில் கொள்ளாமல் அவரை வேலைக்கு சேர்த்தது பிழையான காரியமாக இருந்தாலும், அந்த பிள்ளையை கொடுமைபடுத்துமளவுக்கு ரிசாட்டின் குடும்பம் செயல்பட்டிருக்குமா என்பதை என்மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் அரசியல்காரணங்களுக்காக சிறையில் இருக்கின்ற நிலையில் அவரது குடும்பமும் கவலைகளோடு இருக்கின்ற நிலையிலும் இப்படியான படுபாதக செயலை அவர்கள் செய்ய வாய்ப்பே இருக்காது என்றே கூறவேண்டும். அதேநேரம் இஷாலினியை வீட்டுக்கு வெளியேயுள்ள சிறிய அறையில் அடைத்துவைத்தார்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றார்கள்…அப்படியென்றால் அவர் தீ மூட்டிக்கொண்டது அந்த வீட்டின் கீழ் தளத்தில் என்கின்றபோது அது எப்படி சாத்தியமானதென்று குறிப்பிட்ட தரப்பினர் சிந்திக்கவேண்டும். இரவு நேரத்தில் வெளி அறையில் பூட்டிவைக்கப்பட்டிர்க்கும் ஒருவர் எப்படி ரிசாட் குடும்பம் தங்கும் வீட்டிக்குள் நுழைந்திருக்க முடியும்…? அதேபோன்று அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்று கூறுகின்றார்கள், அது இஷாலினி ரிசாட் வீட்டில் வேலைக்கு சேர்வதற்கு முதல் நடந்ததா.? அல்லது வீட்டில் சேர்ந்ததன் பின் நடந்ததாவென்று ஊர்ஜீதபடுத்தப்படாத நிலையில் அதனை ரிசாட்டின் சொந்தக்காரர்களே செய்தார்கள் என்று கூக்குரலிடும் ஊடகங்களும், தமிழ் அரசியல்வாதிகளினதும் நோக்கம் என்னவென்பதை நடுநிலையாக சிந்திக்கும் எவரும் புரிந்துகொள்வார்கள். ஆகவே இஷாலினியின் மரணம் பல கேள்விகளை எழுப்பி நிற்கின்ற இந்த நிலையில், உண்மைகளை ஒருபக்கம் ஒதுக்கிதள்ளிவிட்டு, ரிசாட் ஒரு சமூகத்தின் தலைவன் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ், சிங்கள ஊடகங்களும், இணயதளங்களும், சில தமிழ் அரசியல்வாதிகளும் படுமோசமான பொய்களை கட்டவிழ்த்து அதன் மூலம் ஆதாயம் தேடவே முயற்சிக்கின்றார்கள். இவர்களின் அட்டகாசத்தை கண்டுபயந்துகொண்ட ரிசாட்டின் கட்சி உறுப்பினர்களும், அவரோடு சேர்ந்து பயணித்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் மௌனித்து நிற்கின்றார்கள் என்றே கூறவேண்டும். இதன் மூலம் இவர்கள் யாரென்பதை மக்கள் புரிந்துகொள்ளவும் முடியும்.

தனிப்பட்ட முறையில் ரிசாட் அவர்களை நன்கு அறிந்தவன் நான்….அரசியல் காரணங்களுக்காக அவரை நான் விமர்சித்தாலும், தனிப்பட்ட முறையில் அவரது குணநலங்களை ஓரளவு புரிந்தவன் நான்….அவர் இறைவன்மீது பயம் கொண்டவர் மட்டுமல்ல, தனிமனித ஒழுக்கவிழுமியங்களை கடைப்பிடிக்கும் ஒருவருமாவார் என்பதை நான் அறிந்தவரை கூறமுடியும்….இப்படிப்பட்டவரின் குடும்பமோ இவரோ இப்படியான ஈனச் செயலில் ஈடுபட்டிருப்பார்களா என்று கூறமுடியாதுள்ளது….ஆகவே அவருடைய கட்சியை சார்ந்தவர்களும், அவரோடு பயணித்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவரது வீட்டுக்கு சென்று உண்மைகளை அறிய முற்படுவதுமட்டுமல்ல, சிறையில் இருப்பவர்களையும் உரிய முறைப்படி சந்தித்து உண்மைகளையறிந்து பகிரங்கபடுத்த முன்வரவேண்டும். நீங்கலெல்லாம் வாய்மூடி மௌனிகளாக இருப்பதனால்தான் பொய்யர்களின் அட்டகாசம் மேலோங்கி செல்கின்றது. தயவு செய்து மீடியாக்களுக்கு முன் வந்து உண்மைகளை சொல்ல தயங்காதீர்கள். அப்படி தயங்கினால் நீங்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது என்றே கூறவேண்டும்…!

-“முனைமருதவன்”-
எம்.எச்.எம்.இப்றாஹிம்..!

Web Design by Srilanka Muslims Web Team