உதயங்கவும் ஒருநாள் சர்வதேச கறுப்பு பட்டியலில் இடம்பெறுவார் - லசந்தவின் மகள் அகிம்சா..! - Sri Lanka Muslim

உதயங்கவும் ஒருநாள் சர்வதேச கறுப்பு பட்டியலில் இடம்பெறுவார் – லசந்தவின் மகள் அகிம்சா..!

Contributors

ஒருநாள் ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்கவீரதுங்கவும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மோசடி தொடர்பான சர்வதேச பட்டியலில் இடம்பெறுவார் என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவினர் ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்து மிகவும்ச ரியான விதத்தில் செயற்பட்டார்கள் என்பதை பன்டோரா பேப்பர் விவகாரம் உறுதி செய்துள்ளது.

நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவினர் உண்மைக்கு அருகில் நெருங்கிச்சென்று கொண்டிருந்த வேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நல்லாட்சி அரசாங்கமும் அந்த பிரிவின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி அதன் நடவடிக்கைகளை குழப்புவதற்கு ஏன் முயன்றார்கள் என்பதும் தற்போது தெளிவாகியுள்ளது.

ஒருநாள் ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்க வீரதுங்கவும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மோசடி தொடர்பான சர்வதேச பட்டியலில் இடம்பெறுவார்.

இதன் மூலம் மிக் விமானக்கொள்வனவில் ராஜபக்சவிற்கு உள்ள தொடர்புகுறித்து நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவினர் சரியான விதத்திலேயே செயற்பட்டனர் என்பதும் இந்த மோசடியை அம்பலப்படுத்தியமைக்காகவே எனது தந்தை கொல்லப்பட்டார் என்பதும் நிரூபணமாகும் என அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team