உதயத்தில் உதித்து உன்னதமாய் ஒளி கொடுத்த பெரியவர் » Sri Lanka Muslim

உதயத்தில் உதித்து உன்னதமாய் ஒளி கொடுத்த பெரியவர்

asra

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

abdul raheem


உதயத்தில் உதித்து
உன்னதமாய் ஒளி கொடுத்த பெரியவர்…
மகுடம் சூடா மன்னனாகியும்
மக்கள் தம் மனக்குறைகளை
துச்சமென்றே நீக்க
அச்சமின்றி வந்தவர்…

தலைமைக்கு முதல் மகன் – அவர்
சமூகமதன் வீர மகன்…
அறிவாலும்
அடக்கத்தாலும்
அணுவணுவாய் அழித்தவர்
அரக்கர்களின் பாரபட்சங்களை

மர நிழலில் மானிடம் வாழ
மண்டியிட்டு போராடி
எம்மவர் நலம் சிறக்க
நீர் செய்த சேவையும்
எத்துணை உயர்ந்தது.

இறையருள் நீரென்று
உரத்துச் சொல்வோம் தலைமையே…
இனி இப்படியோர்
தலைமகன் தான்
எங்கு பெறுவோம் வீரமே…

கருகிய உம்முடலின்
புகைவாசம் தான்
இன்று நுகரப்படாதவன் நாசையும்
துளைக்கிறது எண்ணங்களால்…

நழுவவிட்ட நாளிது….
புரட்டாதியின் பதினாறில்
புடம்போடப்பட்ட மனங்களும் எம்முடையது…
இன்னும்
நினைந்து கொள்கிறோம்
இறை முன் பிரார்த்தனைகளோடு.

asra

Web Design by The Design Lanka