உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் - மாபெரும் இரத்ததான முகாம்-படங்கள். - Sri Lanka Muslim

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் – மாபெரும் இரத்ததான முகாம்-படங்கள்.

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் மனித நேயம் பேணும் மாபெரும் முதலாவது இரத்ததான முகாம் 27-09-2014 நேற்று சனிக்கிழமை காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் இடம்பெற்றது.

 

கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் உப தலைவர் ஏ.எஸ்.ஏ.ஜௌஸகி தலைமையில் இடம்பெற்ற இவ் மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாமில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும்,பொருளாதார அபிவிருத்;தி பிரதியமைச்சருமான

 

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பகாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும், விஷேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி  யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

 

இதன் போது நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இங்கு இரத்ததானம் வழங்குவோரை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் யஸிந்து பெர்னாண்டோ பரிசோதித்தார்.

 

இந்நிகழ்வில் ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் மும்தாஸ் மதனி, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சியாட் ஜேபி,கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் பதில் தலைவர் ஏ.ஏ.அல்பர்,அதன் செயலாளர் எம்.ஐ.எம்.சிஹாப்,அதன் பொருளாளர் எம்.ஏ.எம்.அல்பர்,உப செயலாளர் எம்.என்.எம்.பஸ்லி, உலமாக்கள் ,முக்கியஸ்தர்கள், கல்வியலாளர்கள் ,ஊர் பிரமுகர்கள்,பொது மக்கள்,இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

bled1.jpg2

 

bled1.jpg2.jpg3.jpg6

 

bled1.jpg2.jpg3.jpg6.jpg6

 

bled1.jpg2.jpg3.jpg7

 

bled1.jpg2.jpg4

 

bled1.jpg2.jpg5

 

bled1

 

bled1.jpg2.jpg3

Web Design by Srilanka Muslims Web Team