உத்தரப் பிரதேசத்தில் ஹஜ் அலுவலகத்துக்கு காவி நிறம் பூசப்பட்டது » Sri Lanka Muslim

உத்தரப் பிரதேசத்தில் ஹஜ் அலுவலகத்துக்கு காவி நிறம் பூசப்பட்டது

jj66

Contributors
author image

Editorial Team

 உத்தரப் பிரதேசத்தில் ஹஜ் அலுவலகத்துக்கு காவி நிறம் பூசப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது லக்னோவில் உள்ள பழைமையான காவல் நிலையம் ஒன்றுக்கும் காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஹஜ் அலுவலகத்துக்கு காவி நிறம் பூசப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது லக்னோவில் உள்ள பழைமையான காவல் நிலையம் ஒன்றுக்கும் காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு  அரசு கட்டிடங்கள் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன. அரசு சம்பந்தப்பட்ட சிறு கையேடுகள், பள்ளிக்கூட பைகள், மேல் துண்டுகள், நாற்காலிகள், பேருந்துகள் ஆகியவை இவற்றில் அடங்கும். இது எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் லக்னோவின் கைசர் பாக் பகுதியில் உள்ளகாவல் நிலையத்துக்கும் தற்போது காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. இது மற்ற காவல் நிலையங்களைப் போலவே சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்து வந்தது. தற்போது காவல் நிலையக் கட்டடத்தின் சில பகுதிகளும் சில தூண்களும் இளம் காவி நிறத்துக்கு மாறியுள்ளன. இது தொடர்பாக அந்தக் காவல் நிலையத்தின் ஆய்வாளரான டி.கே. உபாத்யாய் கூறுகையில் இரண்டரை மாதங்களுக்கு முன் தொடங்கிய புதுப்பிக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளன என்றார்.

இதனிடையே, மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுனில் சிங் சாஜன் கூறுகையில், “ மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள தோல்வியில் மக்களைத் திசை திருப்புவதற்காகவே அவர்கள் காவி நிற அரசியலில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்

Web Design by The Design Lanka