உயன்வத்தை ரம்ஜான் அவர்களின் மறைவு ஊடகத்துறைக்கு பெரும் இழப்பாகும் - அமைச்சர் றிசாத் பதியுதீன் - Sri Lanka Muslim

உயன்வத்தை ரம்ஜான் அவர்களின் மறைவு ஊடகத்துறைக்கு பெரும் இழப்பாகும் – அமைச்சர் றிசாத் பதியுதீன்

Contributors

qou167

 

–    இர்ஷாத் றஹ்மத்துல்லா –

சிறந்த எழுத்தாளரும்,ஊடகவியலாளருமான மாவனல்லை உயன்வத்தை ரம்ஜான் அவர்களின் மறைவு ஊடகத்துறைக்கு பெரும் இழப்பாகும் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,அன்னாரின் உயர் சுவனத்திற்காக பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

 

 

நேற்று வபாத்தமன அல்ஹாஜ்.எம்.ரம்ஜான் மிகவும் மிருதுவான சுபாவம் கொண்டவர்.முஸ்லிம் சமூகத்திற்கு தன்னால் ஆன அதிவுயர் பணியினை செய்துள்ளதுடன்,அவர் வாழும் காலத்தில் மிகவும் சமூக பொறுப்புடன் செயற்பட்டவர்.

 

 

முஸ்லிம் மீடியா போரத்தின் மூலம் அறிமுகமான மர்ஹூம் ரம்ஜான் அவர்கள் பேசுகின்ற போது,மிகவும் அடக்கத்தை அவர் மொழியில் காணலாம்.எழுத்துறையின் ஊடாக சமூக மாற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்ட அவர் காலத்தின் தேவையுணரந்து நுால்களையும் வெளியிட்டுள்ளார்.

 

 

இலங்கையில் பேசப்படுகின்ற ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தளார்கள் வரிசையில் மாவனல்லை என்று கூறுகின்ற போது அவர் பெயர் உயன்வத்தையா என்று கேட்டால் அது ரம்ஜான் என்பதை பொதித்து காட்டும் ஒருவராக மர்ஹூம் ரம்ஜான் சிலாகித்து பேசப்பட்டார்.

 

 

மிகவும் நெருக்கமாக பழகக் கூடியவராக மர்ஹூம் ரம்ஜான் காணப்பட்டதை இந்த சந்தரப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.ரம்ஜானின் ஜன்னத்துல் பிர்தவூஸ் சுவனத்திற்காக எல்லாம் வல்ல இறைவனைிடம் பிரார்த்திப்பதாக தெரவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர் மற்றம் ஊடக சொந்தங்கள் அனைவருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரவிப்பதாகவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team