உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி- கிழக்கு மாகாணத்தில் -சாய்ந்தமருதில் - Sri Lanka Muslim

உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி- கிழக்கு மாகாணத்தில் -சாய்ந்தமருதில்

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி எதிர்வரும் சனி (13), ஞாயிறு (14) ஆகிய தினங்களில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் ஸம்ஸ் லங்கா ஹோல்டிங் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற ஏற்பாடகியுள்ளது.

 

இவ்வுயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சியானது மாணவர்கள் சிறந்த முறையில் உயர் கல்வியை கற்பதற்கு ஏற்ற கல்வி நிலையங்களை அறிமுகம் செய்து வைப்பதற்கும், சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற விரும்பும் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் நல்லதொரு வாய்ப்பாக  அமையும் என​ எதிர்பார்க்கப்படுகிறது.

 

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்று முடிந்துள்ள இத்தறுவாயில் இக்கண்காட்சி நடைபெறுவது மாணவர்களின் ஆக்கபூர்வமான கல்விப் பயணத்திற்கு சாதமாக அமையும் எனக் கருதப்படுகிறது.

 

கடந்த காலங்களில் இவ்வாறான கண்காட்சிகள் தலைநகரமாகிய  கொழும்பில் ஆண்டுதோறும் நடைபெற்றுவந்தது. தற்போது முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ளது. இது கிழக்கு மாகாண மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும்.

 

இக் கண்காட்சியில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பல்கலைக் கழகங்களின் பிரதிநதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

இதன் மூலம் ஒரே இடத்தில் சகல நிறுவனங்களையும் சந்தித்து மாணவர்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அமையும்.

 

இதன்போது சில கல்வி நிறுவனங்களினது காட்சிப் பீடத்தில் பதிவினை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள், டெப் மற்றும் விலைக் கழிவு என்பனவற்றை வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

ex

Web Design by Srilanka Muslims Web Team