உயர் தரம் மற்றும் 5 ஆம் புலமைப்பரிசில் பரீட்சைகளை பிற்போடுவதா, இல்லையா? - பதில் தெரிவிக்கிறார் கல்வி அமைச்சின் செயலாளர் - Sri Lanka Muslim

உயர் தரம் மற்றும் 5 ஆம் புலமைப்பரிசில் பரீட்சைகளை பிற்போடுவதா, இல்லையா? – பதில் தெரிவிக்கிறார் கல்வி அமைச்சின் செயலாளர்

Contributors

எம்.எம்.சில்வெஸ்டர்)

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை முடிவுகள் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெளியிட முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன பிற்போடப்படுவதற்கு இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், பாடத்திட்டங்கள் முடிக்கப்படாமலிருந்தால் அது தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னர், பரீட்சைகளை குறித்த தினத்தில் நடத்துவதா அல்லது பிற்போடுவதா என்ற இறுதித் தீர்மானத்துக்கு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் முடிவடைந்த க.பொ.த. சாதாரணத தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team