உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் போராட்டம் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று தீர்மானம் - Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் போராட்டம் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று தீர்மானம்

Contributors

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு

நீதி கோரும் போராட்டம் தொடர்பாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


இந்த முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(19) நடைபெறவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட் டோருக்கான நீதிக்கான பேராயர் குழு கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் நீதித்துறை செயன்முறையின் சுயாதீனத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தியிருந்தது.

மேலும் இத்தாக்குதல்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புகொண்ட அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வரவும் சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவர் மீதான விசாரணைக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

மேலும் குண்டுவெடிப்பை தடுப்பதற்கான தமது கடமையைப் புறக்கணித்த அரசியல்வாதிகள் மீது வழக்குத் தொடர விரும்புவதாகவும் இஸ்லாமியப் பயங்கரவாதக் குழுக்களை அவசரமாக தடைசெய்யவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை ஆழமாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு அதன் கண்டு பிடிப்புகளை இம்மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thinakural

Web Design by Srilanka Muslims Web Team