உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறக் காரணம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே - பாதுகாப்புச் செயலாளர் - Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறக் காரணம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே – பாதுகாப்புச் செயலாளர்

Contributors

நாட்டின் புலனாய்வுப் பிரிவு பலவீனமடைந்திருந்தமையால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றதாகக்கூற முடியாது. புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்கள் கிடைத்திருந்தும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே தாக்குதல்கள் இடம்பெறக் காரணமாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அத்தனகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றபோது இலங்கையின் புலனாய்வுப் பிரிவு முழுமையாக பலவீனமடைந்திருந்தது. எனினும் புலனாய்வுப் பிரிவு பலவீனமடைந்திருந்தமையால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும்கூற முடியாது. காரணம் அவர்களுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தன.

இவ்வாறு தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையின் காரணமாகவே தாக்குதல்கள் இடம்பெற்றன. இவற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவம் நாட்டில் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு தேவையான சகல வேலைத்திட்டங்களும் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team