உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விசாரணை- மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழு..! - Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விசாரணை- மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழு..!

Contributors

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளை நடத்துவதற்காக மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி தமித்த தொட்டவத்த தலைமையில் இந்த நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 250ற்கும் அதிகமானவர்கள் பலியானதுடன், 500 க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை நடத்துவதற்காக மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி தமித்த தொட்டவத்த தலைமையிலான இந்த நீதிபதிகள் குழாமில், நீதிபதிகளான அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நீதிபதிகள் குழு, பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணைகளை நடத்தி வருகின்ற ஸ்ரீலங்கா அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை உள்ளிட்ட எதிர்க்கட்சி தரப்பினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team