உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அச்சமின்றி CIDக்கு வழங்குங்கள் - பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள்..! - Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அச்சமின்றி CIDக்கு வழங்குங்கள் – பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள்..!

Contributors

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அவற்றை எவ்வித அச்சமுமின்றி குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்கிரமரத்ன , தகவல்களை வழங்குபவர்களின் இரகசிய தன்மை பேணப்படும் என்றும் உறுதியளித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சகல விசாரணைகள் குறித்தும் அண்மையில் விசேட அறிவிப்பை விடுத்திருந்தேன். அதன்போது சகல காரணிகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.

எனவே, இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் பொதுமக்களிடம் காணப்பட்டால் அவற்றை எவ்வித அச்சமும் இன்றி குற்ற புலனாய்வு திணைக்களத்துக்கு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். அவ்வாறு வழங்கப்பட்டால் அவை தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.

Web Design by Srilanka Muslims Web Team