உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையின் போது எந்த சமூகத்தையும் இலக்குவைக்கவில்லை - அமைச்சரவை பேச்சாளர்..! - Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையின் போது எந்த சமூகத்தையும் இலக்குவைக்கவில்லை – அமைச்சரவை பேச்சாளர்..!

Contributors

இலங்கையில் முஸ்லீம் சமூகத்தினரின் பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதத்தை அரசாங்கம் இன்று வழங்கியுள்ளது. அனைத்து இலங்கையர்களிற்கும் கௌரவமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான மக்கள் ஆணை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் விசாரணைகளின் போது அரசாங்கம் எந்த சமூகத்தையும் விசேடமாக இலக்குவைக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாங்கள் பொறுப்புவாய்ந்த அரசாங்கம் அனைத்;து சமூகத்தினரினதும் நலன்கள் குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team