உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ரணிலை நீக்கியது உயர்நீதிமன்றம்! - Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ரணிலை நீக்கியது உயர்நீதிமன்றம்!

Contributors

ஈஸ்டர் குண்டுதா  தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் பிரதிவாதிகள் பட்டியலில் இருந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை நீக்குவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமையின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதில்லை என உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team