உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது..! » Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது..!

Contributors

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது என தெரிவித்துள்ள ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இரு விடயங்களை தெரிந்துகொள்ளவிரும்புகின்றனர் என தெரிவித்துள்ள அவர் எச்சரிக்கை கிடைத்த நிலையிலும் தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியது யார் என்பதை முதலாவதாக மக்கள் அறிய விரும்புகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை குண்டுதாரிகளின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர் என குறிப்பிட்டுள்ள இந்த கேள்விக்கு அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கமும் ஜனாதிபதியும் மறைக்கமுயல்வதாக தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க கிராமத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தும் முறை குறித்து தெரிவித்துள்ளார்.

காட்டில் விலங்குகளை பிடிப்பதற்காக பொறிவைப்பவர்களை பிடிப்பதற்காக பொலிஸார் கொல்லப்பட்ட விலங்கினை தனது தோளில் சுமந்து சென்ற நபரை தேடுவார்கள் என ஜேவியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஒரு வேட்டை என கருதினால் தாக்குதல் இடம்பெற்று ஒன்றரை வருடங்களின் பின்னரும் வேட்டையாடப்பட்ட விலங்கை தூக்கி சுமப்பவர்கள் யார் என்பது குறித்து சிந்திக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு யார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தினார்கள் நாட்டின் அரசியலை மாற்றுவதற்கு யார் பயன்படுத்தினார்கள் எனவும் நாங்கள் சிந்திக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் என்னவென்பது குறித்து அறிந்துகொள்வதற்கான உரிமை மக்களுக்குள்ளது அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ போன்றவர்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளசில விடயங்கள் காணாமல்போகச்செய்வதில் வல்லவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka