உரம் வழங்கப்படாவிட்டால் விவசாயத்தைக் கைவிடுவோம் - ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் தெரிவிப்பு..! - Sri Lanka Muslim

உரம் வழங்கப்படாவிட்டால் விவசாயத்தைக் கைவிடுவோம் – ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் தெரிவிப்பு..!

Contributors

இரசாயன உரங்களை வழங்கக் கோரி எலஹெரா இயக்கத்தின் 600 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று பகமுன நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய அமைச்சர் மஹிந்தானந்த போன்று வேடமிட்டு உடையணிந்த குழுவினர் பிரேதப் பெட்டியைச் சுமந்து கொண்டு விவசாயிகளுக்கு அரசாங்கம் மரணத்துக்கு வழிவகுத்துள்ளது என சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்வரும் 25 ஆம் திகதி விவசாயத்துக்கான தண்ணீரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் உரம் வழங்கப்படாவிட்டால் விவசாயத்தைக் கைவிட்டு வெளியேறுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி எலஹெரா இயக்கத்தின் விவசாயத்துக்குத் தண்ணீர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விவசாயத்துக்கான தண்ணீர் வழங்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும் உரம் வழங்கும் திகதி குறித்து எந்த அதிகாரியும் அறிவிக்காததால் விவசாயம் தொடர்பாக எந்தக் கவனத்தையும் செலுத்த முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, உரம் வழங்காமல் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை விட வேண்டாம் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயியின் குரலுக்குச் செவிசாய்க்காமல் தண்ணீர் வழங்கி னால், விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு விடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team