உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம் - தயா கமகே ..! » Sri Lanka Muslim

உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம் – தயா கமகே ..!

thaya gamege

Contributors
author image

Editorial Team

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார்.

மேலும், 2020 ஆம் ஆண்டிலே ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு 2019 ஆம் ஆண்டே வெளிவரும். ஆனால் தற்‍போதே ஜனாதிபதி தேர்தலுக்கான களம் தோற்றம் பெற ஆரம்பித்து விட்டது.

இந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‍பொது வேட்பாளரை களமிறக்காது, ஐ.தே.வை. சார்ந்த ஒருவரையே களத்தில் இறக்கும்.

இதன்படி கட்சியின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாவை களமிறக்குவதா அல்லது சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதா என்பது தொடர்பில் ஆராய்ந்து கட்சியின் முடிவை உரிய நேரத்தில் அறிவிப்‍போம் என்றார்.

Web Design by The Design Lanka