உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தலாகவே இன்றைய போட்டி அமையும்: சந்திமால் - Sri Lanka Muslim

உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தலாகவே இன்றைய போட்டி அமையும்: சந்திமால்

Contributors

நியூசிலாந்து அணிக்கெதிராக இன்று ஆரம்பமாகவும் ருவென்டி ருவெவன்டி கிரிக்கெட் தொடரை, உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடருக்கான தயார்படுத்தலாக பயன்படுத்த முடியும் என இலங்கை அணித் தலைவர் டினேஷ் சந்திமால் தெரிவிக்கின்றார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகலே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

பங்களாதேஷில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி தனது முதலாவது குழு நிலைப் போட்டியில் இலங்கை அணி விளையாடவுள்ளது.

நியூசிலாந்துடனான போட்டிக்கு முன்னதாக நேற்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் டினேஸ் சந்திமால் கருத்து வெளியிட்டார்.

”உலக கிண்ண போட்டிகளுக்கு முன்னதாக ஆறு போட்டிகள் உள்ளன. அதன் காரணமாக அணியில் பல மாற்றங்களை மேற்கொள்ள நாம் விருப்பவில்லை. தலைவர் என்ற வகையில் உலகக் கிண்ண தொடரில் விளையாடும் 11 வீரர்கள் குறித்து நான் தொடர்தும் கவனம் செலுத்தியுள்ளேன். இரண்டு அல்லது மூன்று வீரர்கள் அதிகமாக பணியாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். முதலாவது போட்டியின் பின்னர் சிறந்த அணியொன்றை தெரிவுசெய்ய நாம் எதிர்பார்க்கின்றோம்”

சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தரப்படுத்தலில் முதலிடத்திலுள்ள இலங்கை அணி இந்த தொடரில் ஒரு போட்டியிலேனும் வெற்றி பெறும் பட்சத்திலேயே முதலிடத்தை தக்க வைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team