உலகக் கிண்ணம்; 22 அணிகள் தகுதி! - Sri Lanka Muslim
Contributors

உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு இதுவரை 22 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
தகுதிச் சுற்றுகளின் அடிப்படையில் மேலும் 11 அணிகள் உலகக் கிண்ணத்துக்கு தேர்வாகவுள்ளன.
2014 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்துக்கான கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெறவுள்ளது. இதில் 32 அணிகள் போட்டியிடவுள்ளன. போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்தில் பிரேசில் நேரடியாக தகுதி பெற்றது. மேலும் 22 அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளன.
எஞ்சியுள்ள 11 இடங்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. ஐரோப்பா , ஆபிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, வட மற்றும் மத்திய அமெரிக்கா, ஓசியானா கண்டங்களில் நடைபெறும் போட்டிகளின் அடிப்படையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்று வருகின்றன.

Web Design by Srilanka Muslims Web Team