உலகநாடுகளிடம் புகார் அளிக்க த.தே.கூட்டமைப்பு முடிவு! - Sri Lanka Muslim

உலகநாடுகளிடம் புகார் அளிக்க த.தே.கூட்டமைப்பு முடிவு!

Contributors

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து புகார் தெரிவிக்க உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, காமன்வெல்த் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்று கூறினார்.

அதேசமயம் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதால் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு நிலவி வருகிறது.

-PT

Web Design by Srilanka Muslims Web Team