உலகம் அழிவை நோக்கி நெருங்குகிறது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை » Sri Lanka Muslim

உலகம் அழிவை நோக்கி நெருங்குகிறது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

jhjh

Contributors
author image

Editorial Team

 உலக தலைவர்களின் பொறுப்பின்மையால் உலகம் அணு ஆயுதப்போர் ஏற்பட்டு உலகம் அழிவை நோக்கி பயணிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்று அழைக்கப்படும்  (Doomsday Clock) அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.  1947-ம் ஆண்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்ட போது ஊழிகாலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டது. தற்போது இது 2 நிமிடங்கள் மட்டுமே இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டூம்ஸ்டே கடிகாரத்தில்  தென்சீனக் கடல் பற்றிய பதட்டங்கள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

தற்போது நிலவும் வடகொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனை அமெரிக்காவிற்கு ஆத்திரமூட்டும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகம் அணுஆயுத போரால் அழிவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகச்சூழலைப் பொறுத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை அறிவியலாளர்கள் மாற்றியமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka