உலகின் பணக்கார முஸ்லிம் அரச தலைவர்கள். - Sri Lanka Muslim

உலகின் பணக்கார முஸ்லிம் அரச தலைவர்கள்.

Contributors

 ஹஃப்பிங்ட்டன் போஸ்ட் வேர்ல்ட் என்னும் இதழ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஒரு காலத்தில் பொதுவுடமைத் தத்துவம் கோலோச்சிய ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதின் 40 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டு,  செல்வந்த அரசத் தலைவர்களுள் முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாமிடத்தில் தாய்லந்து மன்னர் பூமிபால் அதுல்யெ தேஜ் (30 பில்லியன் டாலர் சொத்துகள்), மூன்றாமிடத்தில் புரூணை சுல்தான் ஹசன் அல் போல்கியா (20 பில்லியன்), நான்காமிடத்தில்சவூதி அரசர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் (18 பில்லியன் டாலர்கள்), ஐக்கிய அரபு அமீரகத் தலைவர் கலீஃபா பின் ஸைத் அல்நஹ்யான் ஐந்தாமிடத்தில் 15 பில்லியனுடன் உள்ளாராம்.

ஆறாமிடத்தில் துபாயை ஆளும் ஷேக் முஹம்மது அல் ராஷித் 14 பில்லியன்களுடன் இருக்க, வடகொரியாவின் கிம் ஜோங் 5 பில்லியன் டாலர்களுடன்  ஏழாமிடத்தில் இருக்கின்றாராம். கத்தர் நாட்டை ஆளும் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி இப்பட்டியலில் 11 ஆம் இடத்தில் இரண்டு பில்லியன் டாலர்கள் கொண்டிருப்பதாகவும், அவரைத் தொடர்ந்து இந்தியாவில் எந்த அரசப் பதவியிலும் இல்லாத, ஆளுங்கட்சித் தலைவர் சோனியா 12 ஆம் இடத்தில் இரண்டு பில்லியன் டாலர்கள் சொத்துகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம் என்று ஒரு காலத்தில் மதிக்கப்பட்ட பிரிட்டிஷ் நாட்டின் அரசி  எலிஸபெத் சுமார் 400 முதல் 500 மில்லியன் டாலர்களுடன் 18 ஆவது இடத்தில் தான் இருக்கிறாராம்.ஓமன் சுல்தான் காபூஸ், சிரியாவின் பஷார் அல் ஆஸாத் ஆகியோரும் இப்பட்டியலில்உள்ளனர்.

தனது இந்தப் பட்டியலின் சான்றாண்மைக்கு எவ்வித செய்திமூலத்தையும் ஹஃப்ட்டிங்டன் போஸ்ட் ஏடு தரவில்லை என்பதும் குறிக்கத்தக்கது.

 

Web Design by Srilanka Muslims Web Team