உலகின் பருமனான பெண் 600 இறாத்தல் நிறை குறைப்பு - Sri Lanka Muslim

உலகின் பருமனான பெண் 600 இறாத்தல் நிறை குறைப்பு

Contributors

தனது சின்னஞ்சிறு பெறா மகன் மீது உருண்டு விழுந்து அவன் மூச்சுத்திணறி உயிரிழக்கக் காரணமாயிருந்த உலகின் அதிநிறை கூடிய பெண் தனது 1000 இறாத்தல் நிறையை 5 வருடங்களில் 600 இறாத்தலால் குறைத்துள்ளார்.

அமெரி்க்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மேரா ரொஸலெஸ் (32 வயது) என்ற மேற்படி பெண் தனது 2 வயது பெறா மகனை எலிஸியோ மீது உருண்டு விழுந்து அவனைக் கொன்றதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தார்.1000 இறாத்தல் நிறையைக் கொண்ட மேரா தவறுதலாக பாலகன் மீது உருண்டு விழுந்துள்ளார்.
இந்நிலையில் பாலகன் மூச்சுத் திணறி உயிரிழந்தான்.
ஆரம்பத்தில் மேரா திட்டமிட்டு படுகொலை செய்ததாக கருதப்பட்டது.
எனினும், 2008ஆம் ஆண்டு மேரா படுகொலை செய்யவில்லை, சிறுவனின் மரணத்துக்கு அவரது அளவு கடந்த நிறையே காரணம் எனவும், அதனால் மேரா குற்றவாளியல்ல எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது பெறா மகனின் மரணத்துக்கு காரணமான தனது நிறையை குறைக்க தீவிரமாகப் போராடிய மேரா, தனது நிறையை 600 இறாத்தலால் குறைத்துள்ளார். தற்போது அவரது நிறை 400 இறாத்தலாகும்.vk

Web Design by Srilanka Muslims Web Team