உலக இருபது 20 கிரிக்கெட் மைதான வசதிகள்: பங்களாதேஷுக்கு நவம்பர் 30 வரை காலக்கெடு! - Sri Lanka Muslim

உலக இருபது 20 கிரிக்கெட் மைதான வசதிகள்: பங்களாதேஷுக்கு நவம்பர் 30 வரை காலக்கெடு!

Contributors

அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை உலக இரு­பது 20 கிரிக்கெட் (ICC World Twenty20) போட்­டி­க­ளுக்­கான விளை­யாட்­ட­ரங்­கு­களை பூர்த்தி செய்­வ­தற்கு சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் நவம்பர் 30ஆம் திக­தி­வரை பங்­க­ளா­தே­ஷுக்கு அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
வச­திகள் குறித்து எழுந்த சந்­தே­கங்கள் கார­ண­மாக தென் ஆபி­ரிக்கா போன்ற வேறொரு நாட்­டிற்கு போட்­டிகள் இட­மாற்­றப்­பட வேண்டி வரலாம் என செய்­திகள் வெளி­வந்­த­வண்ணம் உள்­ளன.
எனினும் காலக்­கெ­டுவை நீடிக்­கு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்­கையை அடுத்து நவம்பர் மாதம் 30ஆம் திக­தி­வரை பங்­க­ளா­தே­ஷுக்கு கால­ அ­வ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
2014 மார்ச் 16ஆம் திகதி முதல் ஏப்ரல் 6வரை நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை உலக இரு­ப­துக்கு 20 கிரிக்கட் போட்­டி­க­ளுக்­கான பூரண கால­அட்­ட­வணை இம் மாதம் 27ஆம் திகதி சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.
போட்டி மைதா­னங்­க­ளுக்­கான ஆலோ­ச­கரின் ஆய்வு அறிக்­கையை அடுத்தே இந்தக் காலக்­கெடு விதிக்­கப்­பட்­டுள்­ளது.
இரு பாலா­ருக்­கு­மான உலக இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டிகள் ஏக­கா­லத்தில் நடை­பெ­ற­வுள்­ளன.
ஆண்­க­ளுக்­கான போட்­டியில் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் பூரண அங்­கத்­துவம் வகிக்கும் பத்து நாடு­க­ளான அவுஸ்­தி­ரே­லியா, பங்­க­ளாதேஷ், இங்­கி­லாந்து, இந்­தியா, நியூ­ஸி­லாந்து, பாகிஸ்தான், தென் ஆபி­ரிக்கா, இலங்கை, மேற்­கிந்­தியத் தீவுகள், ஸிம்­பாப்வே ஆகி­யன நேரடி தகு­தியைப் பெறும்.
இத­னை­விட இணை உறுப்பு நாடு­க­ளுக்கு இடை­யி­லான தகு­திகாண் சுற்றின் மூலம் 6 நாடுகள் தகு­தி­பெறும். தகு­திகாண் சுற்று ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்­ளது.
பெண்­க­ளுக்­கான போட்­டி­களில் அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து, இந்­தியா, நியூ­ஸி­லாந்து, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வரவேற்பு நாடான பங்களாதேஷ் ஆகியவற்றுடன் தகுதி சுற்றின் மூலம் இலங்கை, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன.

-என்.வீ.ஏ

Web Design by Srilanka Muslims Web Team