உலக இருபது20 கிரிக்கெட் தொடருக்கு நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் தகுதி! - Sri Lanka Muslim

உலக இருபது20 கிரிக்கெட் தொடருக்கு நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் தகுதி!

Contributors

பங்களாதேஷில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் தகுதிபெற்றுள்ளன.

ஹொங்கொங் அணிக்கு எதிராக அபுதாபி விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் கால் இறுதிப் போட்டியில் கடைசிப் பந்தில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டியதன் மூலம் நேபாளம் இத் தகுதியைப் பெற்றது.
உலக விளையாட்டுப் போட்டி ஒன்றில் நேபாளம் விளையாடவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. இதில் வக்காஸ் பர்காத், நிஸாகத் கான், தன்விர் அஃவ்சால் ஆகியோர் தலா 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் ஜே. முக்கியா 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதில் அணித் தலைவர் பீ. காத்கா 46 ஓட்டங்களையும் ஜீ. மல்லா 30 ஓட்டங்களையும் பெற்றனர். ஆட்டநாயகனாக பீ. காத்கா தெரிவானார்.
இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நெதர்லாந்து அணிகளிடையிலான இன்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் ஐ.அ.இ. அணி 10 விக்கெட்களால் வெற்றிபெற்று 4ஆவது அணியாக இ20 உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றது.
என்.வீ.ஏ

Web Design by Srilanka Muslims Web Team