உலக இளைஞர் மாநாடு அடுத்த ஆண்டில் கொழும்பில் - Sri Lanka Muslim

உலக இளைஞர் மாநாடு அடுத்த ஆண்டில் கொழும்பில்

Contributors

அடுத்த ஆண்டு மே மாதம் கொழும்பில் ´உலக இளைஞர் மாநாடு” நடைபெறவுள்ளதால், 2014ஆம் ஆண்டு இலங்கை இளைஞர்கள் அபிவிருத்தியில் முக்கியமானதாக இருக்குமென தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா தெரிவித்தார்.

இளைஞர்கள் தொடர்பில் இலங்கையினால் மேற்கொள்ளப்படும் வரவேற்கத்தக்க முயற்சிகள் காரணமாக, இலங்கை ஒரு சிறந்த நாடு என்ற சமிக்கையினை வெளிப்டுத்துகின்றதென அவர் குறிப்பிட்டார்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர் அபிவிருத்தி என்பது சமூக நலன் என்ற மனோபாவத்துடன் பேசப்பட்டது எனத் தெரிவித்த அவர், தேசத்தை கட்டியெழுப்பும் பணிக்கு இணையாக அரசாங்கத்தினால் இந்த மனோபாவத்தை மாற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

“அபிவிருத்தியின் முக்கியத்துவம் மிக்க பிரிவினராக இளைஞர் உள்ளனர்” என்ற மனோநிலை நாடு முழுவதும் வியாபிக்கச் செய்யப்பட்டுள்ளது என பெரேரா தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் சர்வதேச ரீதியான நற்பெயரை பெற்று குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் அவர்கள் 2012இல் வெளியிடப்பட்ட ´உலக இளைஞர் அபிவிருத்தி” தொடர்பில் சமர்ப்பித்த பத்திரத்தில் இலங்கை பற்றி 14 தடவைகள் குறிப்பிட்டிருந்தமையானது இலங்கை எவ்வளவு தூரம் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது என பெரேரா தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு மற்றும் இளைஞர் திறன் ஆகியவற்றை பற்றாக்குறை எதுவுமின்றி நாடு கொண்டிருப்பதன் காரணமாக உலக அளவிலான எந்த ஒரு நிகழ்வையும் நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் லலித் பியும் பெரேரா கூறினார்.

சர்வதேச அரங்கில் இளைஞர் தொடர்பில் பேசப்படும்போது போது இலங்கை பற்றியும் பேசப்படும் நிலை விரைவில் உருவாகும் என அவர் குறிப்பிடப்டார்.

உலக இளைஞர் மாநாட்டினை மே மாதம் 6ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்துவதற்கு ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த மாநாடு “2016இற்கு பின்னர் மிலேனியம் அபிவிருத்தி” என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.

இதில் 1,500 வெளிநாட்டு இளைஞர்கள் பிரதிநிதிகளும் 100 உள்ளூர் இளைஞர்கள் பிரதிநிதிகளும் பங்கேற்கபர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டிற்கு இணைவானதாக பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்த அவர் மாநாட்டுடனும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளுடனும் சுமார் 10,000 இலங்கை இளைஞர்களை தொடர்புபடுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

இதேவேளை, இலச்சினையொன்றை வடிவமைப்பதற்கான போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது. இது ஜனவரி மாதம் 31ம் திகதி முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ad)

Web Design by Srilanka Muslims Web Team