உலக உளநல தினம்!!! - Sri Lanka Muslim
Contributors

download11

(எம்.எம்.ஏ. ஸமட்)

 இன்று உலக உளநல தினம். உலக சுகாதார அமைப்பினால் 1992ஆம் ஆண்டு இவ்வுலக உளநல தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாளை அனுஷ்டிக்கப்படும் இத்தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சினால் பல்வேறு நிகழ்ச்சிகள் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வருத்தின் உலக உளநல தினம்  ’உள நலமும் முதியோரும்’ எனும் தொணிப் பொருளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இத்தினத்தைமுன்னிட்டு சுகாதார அமைச்சினால் மக்களிடையே உள நலம் தொடர்பில் வழிப்புணர்பூட்டும் நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், உள நல விருத்திக்கான உளவள ஆலோசனை, உள நோயைத் தடுத்தல், சிகிச்கை மற்றும் நோயாளர்களுக்கு புனர்வாழ்வளித்தல் போன்ற சேவையும் இத்தினத்தில் தேசிய மட்டத்தில் சுகாதார உத்தியோத்தர்களினால் முன்னெடுக்கப்படும்.
அத்துடன், உலக உளநல தினத்தை முன்னிட்டு தேசிய மன நல நிறுவகத்தின் ஏற்பாட்டில்  உல நல நடைபாதை  நிகழச்சியொன்று பத்தரமுல்லை ‘தியத்த உயன’ வில் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், அங்கோடயில் அமைந்துள்ள தேசிய மன நல நிறுவத்தில் கலை மற்றும் கைப்பணிப் பொருட் கண்காட்சி ஒன்றும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இவை தவிர பல்வேறு சமூக அமைப்புக்கள் மற்றும் தன்னார்வு தொன்று நிறுவனங்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, இலங்கையின் சனத்தொகையில் ஐந்தில் ஒருவர்  உள நோய்க்குள்ளாகியுள்ள போதிலும் அவர்களில் 20 வீதத்தினரே சிகிச்சை பெறுவதாக தேசிய மன நல நிறுவகத்தின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.
மன அழுதம், மனச்சோர்வு, அச்ச நோய் போன்ற உள நோய்க்கு அதிகளவினார் பாதிக்கப்பட்டுள்ளதகவும் நாட்டில் அதிகரித்துள்ள தற்கொலைக்கும் தற்கொலை முயற்சிக்கும் மனச்சோர்வே பிரதான காரணமாகவுள்ளதாகவும் இளம் பெண்களை விட இளம் ஆண்களே தற்கொலை செய்வதும் தற்கொலைக்கான முயற்சிகளை மேற்கொள்வதும் இடம் பெறுவதாக அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team