உலக கிண்ணத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த டிரினிடாட் அண்ட் டுபாக்கோ » Sri Lanka Muslim

உலக கிண்ணத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த டிரினிடாட் அண்ட் டுபாக்கோ

s.jpeg2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் அமெரிக்க அணி, கடைசி ஆட்டத்தில் டிரினிடாட் அண்ட் டுபாக்கோ அணியிடம் தோற்றதால் உலக கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு பிபா உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கான பிரிவில் மொத்தம் 35 அணிகள் விளையாடின. 4 சுற்றுகளின் முடிவில் மெக்சகோ, கோஸ்டா ரிகா, பனாமா, ஹோண்டுராஸ், அமெரிக்கா, டிரினிடாட் அண்ட் டுபாக்கோ ஆகிய 6 அணிகள் ரவுண்ட் ராபின் சுற்றுக்கு முன்னேறின.

இதில் இருந்து 3 அணிகள் மட்டுமே உலக கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை பெறும் என்பதால் இந்த அணிகளுக்கிடையே போட்டி கடுமையாக இருந்தது.

ரவுண்ட் ராபின் சுற்றில் மிக முக்கியமான ஆட்டத்தில் அமெரிக்காவும் டிரினிடாட் அண்ட் டுபாக்கோவும் செவ்வாய்க்கிழமை இரவு மோதின. இதில் அமெரிக்கா 2-1 என தோல்வி அடைந்தது. அதேசமயம், ஹோண்டுராஸ், பனாமா அணிகள் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

எனவே, புள்ளி பட்டியலில் அமெரிக்கா 5-வது இடத்திற்கு பின்தங்கியதால் உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோனது. இந்த பிரிவில் இருந்து கோஸ்டா ரிகா, மெக்சிகோ மற்றும் பனாமா ஆகிய அணிகள் உலக கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளன.

1986-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க அணி உலக கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது.

s s.jpeg2

Web Design by The Design Lanka