உல்லாசத்துக்கு இடையூறு! 4 வயது சிறுமி கொன்று புதைப்பு - Sri Lanka Muslim

உல்லாசத்துக்கு இடையூறு! 4 வயது சிறுமி கொன்று புதைப்பு

Contributors

உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து 4 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள திருவாளியூரை சேர்ந்தவர் ராணி (வயது 24), கூலி வேலை செய்து வந்தார்.

இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதலால், மகள் ஆப்ஸ்(வயது 4)உடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் ராணிக்கும், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்(வயது 29) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

ரஞ்சித்தின் நண்பர் கேசின்(வயது 19) என்வரும் ராணியை விரும்பியுள்ளார்.

இதற்கு ராணி சம்மதம் தெரிவிக்கவே, மூன்று பேரும் ஜாலியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே கள்ளக்காதலர்களின் உல்லாசத்துக்கு 4 வயது சிறுமி ஆப்ஸ் இடையூராக இருப்பதாக ரஞ்சித் மற்றும் கேசின் நினைத்தனர்.

இதனால் அந்த சிறுமியை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

சம்பவத்தன்று ராணி வேலைக்கு சென்ற நேரத்தில், சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன் குழி தோண்டி புதைத்து விட்டனர்.

வீடு வந்த பார்த்த போது அதிர்ச்சி அடைந்த ராணி, பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், ராணியின் சம்மதப்படியே சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து ராணி, ரஞ்சித், கேசின் ஆகிய 3 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team