உளவள ஆக்கத்திறன் கண்காட்சி-படங்கள். - Sri Lanka Muslim
Contributors

-பழுலுல்லாஹ் பர்ஹான்

 

காத்தான்குடி –உமர் சன சமூக நிலையத்தின் கீழ் இயங்கிவரும் அல்-உமர் பாலர் பாடசாலை பாலர்களின் 2014 மாபெரும் உளவள ஆக்கத்திறன் கண்காட்;சி  புதிய காத்தான்குடி -06  அல்-உமர் பாலர் பாடசாலையில் 22-08-214 இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 

உமர் சன சமூக நிலையத்தின் தலைவர் ஏ.எல்.அம்ஜத் தலைமையில் இடம்பெற்ற உளவள ஆக்கத்திறன் கண்காட்;சி ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

 

இதன் போது மேற்படி கண்காட்சி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

இக் கண்காட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் கண்காட்சி பொருட்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இங்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் உமர் சன சமூக நிலையத்திற்கு ஒலி பெருக்கி சாதனம் வாங்குவதற்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து 40000 ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டது.

 

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை, உமர் சன சமூக நிலையத்தின் செயலாளர் ஏ.எல்.முஹம்மட் இர்சாட் உட்பட உமர் சன சமூக நிலையத்தின் முக்கியஸ்தர்கள்,ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

இக் கண்காட்சி ஆகஸ்ட் 23 திகதி சனி மற்றும் 24 திகதி ஞாயிறு கிழமைகளில் முற்பகல் -9 மணி தொடக்கம் 12 மணி வரையும் ,பிற்பகல் 4 மணி தொடக்கம் பிற்பகல் 8 மணி வரையும் இடம்பெறும்.

 

16

 

17

 

18

 

19

 

20

Web Design by Srilanka Muslims Web Team