உள்ளுராட்சி சட்டத்தை மாற்ற தயார் - ஜனாதிபதி - Sri Lanka Muslim

உள்ளுராட்சி சட்டத்தை மாற்ற தயார் – ஜனாதிபதி

Contributors

தேவை ஏற்படின் உள்ளுராட்சி சட்ட மூலத்தை திருத்தி அமைக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சில உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டம் தோல்வி அடைந்த நிலையில் அரசாங்கத்தில் குழப்பங்கள் காணப்படுவதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும் அவ்வாறான குழுப்பங்கள் எவையும் அரசாங்கத்தினுள் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உள்ளுராட்சி சட்ட மூலத்தை மறுசீரமைத்து, ஏற்கனவே இருந்த நிலைமைக்கே கொண்டு வரவதற்கும் தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.(soorfm)

Web Design by Srilanka Muslims Web Team