உள்ளுராட்சி மன்றங்களின் நல்லாளுகை விருத்திச் செயற்திட்டங்களுக்கு உதவியளிப்பதற்கு ஆசியா மன்றம் முன்வந்துள்ளது. - Sri Lanka Muslim

உள்ளுராட்சி மன்றங்களின் நல்லாளுகை விருத்திச் செயற்திட்டங்களுக்கு உதவியளிப்பதற்கு ஆசியா மன்றம் முன்வந்துள்ளது.

Contributors
author image

Mohamed Ibrahim Valleeth

மாகாண சபைகள் மற்றும்  உள்ளுராட்சி மன்றங்களின் நல்லாளுகை விருத்திச் செயற்திட்டங்களுக்கு உதவியளிப்பதற்கு ஆசியா மன்றம் முன்வந்துள்ளது.

 

கடந்த செவ்வாய்க் கிழமை (09.09.2014) உள்ளுர் ஆளுகை நிறுவகத்தில் (SLILG)) அதன் பதில் பணிப்பாளரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்புச்செயலளருமான பொறியியலாளர் எம்.எஸ். நஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக இதற்கான உளுதி மொழி வழங்கப்பட்டது.

 

இக்கலந்துரையாடலில் ஆசியா மன்றத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் கோபகுமார் தம்பி, பிரதிப் பணிப்பாளர் ஏ. சுபாகரன், நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம். வலீத் ஆகியோருடன் உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

இக்கலந்துரையாடலின் போது உள்ளுர் ஆளுகை நிறுலகத்தின் அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கான பொறிமுறைச் செயற்திட்டங்களை தயாரிப்பதற்கும், நல் அனுபவங்களையும் பெறுமதிமிக்க தொழில்நுட்பரீதியான விடயங்களை வலயமைப்பின் ஊடாக உடன் பகிர்ந்து கொள்வதற்கு தேசிய நல்லாட்சி வளநிலயம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

 

மேலும் மக்கள் பிரதி நிதிகளான மாகான சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களிற்கும்; இத்துறை சார்ந்த திணைக்களங்களில் பணி புரியும் உத்தியோகத்தர்களுக்கும் துறைசார் பயிற்சிகளை வழங்குவதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்து.

 

நல்லாளுகை விருத்தி செயற்திட்டங்களில் வெற்றி கண்டு சர்வதேச ரீதியாக முன்னணி வகிக்கும் நாடுகளுக்கு விஜயம் செய்வது குறித்தும் இக்கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.

 

10

 

11

 

12

Web Design by Srilanka Muslims Web Team