ஊடகவியலாளராக மாறப் போகின்றேன்: ஹரீஸ் எம்.பி - Sri Lanka Muslim

ஊடகவியலாளராக மாறப் போகின்றேன்: ஹரீஸ் எம்.பி

Contributors

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடனான புது வருட ஒன்றுகூடல் இன்று (01.01.2014) இரவு மாளிகைக்காடு பிஸ்மில்லா ரெஸ்டூரண்டில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மற்றும் த முரசு, இம்போர்ட் மிரர், மெட்ரோ மிரர், மெட்ரோ லீடர், கலசம், அலிஸ் நியூஸ், கல்முனை நியூஸ், கலம் பெஸ்ட் ஆகிய இணையத்தளங்களின் உரிமையாளர்களும் இதில் பங்கேற்றனர்.

ஒரு அரசியல்வாதி பேசிக் கொண்டு செல்ல அங்கு வருகை தந்திருக்கும் ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரும் அவ்வரசியல்வாதியிடம் கேள்விகளைக் கேட்கும் வழமையான முறை இங்கு மாற்றியமைக்கப்பட்டிருந்தது.

அதாவது, அரசியலுக்கு உறுதுணையாக இருக்கும் ஊடகவியலாளர்கள் தமது மனக்கிடக்கைகளில் புதைந்திருக்கும் மன அழுத்தங்களை போக்கிக் கொள்வதற்கான களமாக இவ்வூடகவியளாளர் ஒன்றுகூடல் அமைந்திருந்த்து.

இவ்வொன்றுகூடல் முழுக்க முழுக்க வித்தியாசமானதாக அமைந்திருந்த்தனால் அனைத்து ஊடகவியலாளர்களையும் வெகுவாக ஈர்த்துக் கொண்டது.

சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் முதல் ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் தமது ஊடக வாழ்வில் தாம் அனுபவித்த சுவாரஷ்யமான அனுபவங்களை சக ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அத்தோடு ஊடகவியலாளர் தாமாக முன்வந்து பாடல்களை பாடியும் கவிகளையும் பொழிந்தும் நிகழ்விற்கு மேலும் மெருகூட்டியது.

நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள்;

இலங்கை மற்றும் சர்வதேசத்தில் நடந்த அரசியல் வரலாற்று உண்மைகள் சம்பவங்கள் தொடர்பாக பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் என்றும்

குறிப்பாக இலங்கையில் தேசிய இனப்போராட்ட காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்தும் எமது பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களுடைய அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் பற்றியும்

தற்காலத்தில் இடம்பெறுகின்ற அரசியல் காய்நகர்த்தல்கள், குறிப்பாக தேசிய அரசியல் தலைமைகளின் அரசியல் வியூகங்கள் மற்றும் காய்நகர்த்தல்கள் சம்பந்தமாகவும்

‘அரசியலில் யுகம் கண்ட உண்மைகள்” எனும் தலைப்பில் வரலாற்றுப் பதிவுகளை எழுதுவதற்காக தானும் ஓர் ஊடகவியலாளராக என்னை மாற்றிக் கொள்ளப் போவதாகவும் அதற்கு ஊடகவியலாளர்கள் தமது அனைத்து ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.(mm)

 

 

 

 

 

 

 

 

 

Web Design by Srilanka Muslims Web Team