ஊடகவியலாளர் மாநாட்டில் பல விடயங்கள் பற்றி பேசிய அஜித் ரோகன - Sri Lanka Muslim

ஊடகவியலாளர் மாநாட்டில் பல விடயங்கள் பற்றி பேசிய அஜித் ரோகன

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

ஊவா மாகணத்தில் தேர்தல் பணிகளுக்காக 11 ஆயிரம் பொலிசார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 45 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 25 பேர் தேர்தல் சம்பவங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அவர்கள் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கிய உத்தரவின்பேரில் எந்தக் கட்சியானாலும் சரி குழம்பங்களை விளைவிப்போரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும். என இன்று பொலிஸ் தலைமையகத்தில் நடத்திய ஊடகவியாளர் மாநாட்டில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகன மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

 

கடந்த ஜனவரி மாதம் நீர்கொழும்பில் நகைக்கடை ஒன்றில் கெல்மட் முகமுடி அனிந்து கொள்ளையடித்த 2 கொள்ளையர்கள் பொலிசாhரினால் பிடிக்கப்பட்டனர். இவர்கள் அக் கடையில் இருந்து 1 கோடி 45 இலட்சத்தை கொள்ளையிட்டு இருந்த்னர். ஆனால் பொலிசாரினால் 7 இலட்சம் ருபா மட்டுமே இவர்களிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதில் சம்பந்தப்பட்ட ஜ.தே.கட்சி மாகாணசபை உறுப்பினர் பொலிசார் பிடித்தனர். ஆனால் ;உண்மையான சந்தேக நபர் உடன் தப்பி மலேசியாவுக்குச் சென்றிருந்தார். அவரை மலேசியா பொலிசாரின் உதபியுடன் நேற்று விமாணம் முலம் அழைத்துவந்தனர். இச் சம்பவத்தினை மேல் மாகாணத்தில் உள்ள வடக்கு  துப்பரியும் பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 மேற்படி சந்தேக நபரிடமே மிகுதிப்பணம் இருக்க வேண்டும். மலேசியாவில் இவர் ஒரு கிராமததில் சென்று  தையல் வேலைத்தளமொன்றில் வேலை செய்தார். ஒரு தமிழ் வீடொன்றில் ;தங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

அத்தடன் மலேசியா அரசு கடந்த 2 வருட காலமாக போதைவஸ்த்து மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட்டு மலேசியா தப்பியோடுபவர்களை சம்பந்தமாக மலேசியா பொலிசார் இலங்கை பொலிசாருடன் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றனர்.

 

இதே போன்று முல்லைத்தீவைச் சோந்த விடுதலைப்புலிகள் பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த பயங்கரவாதியும் துபாய் நாட்டுக்கு  தப்பியோடியிருந்தனர். இவர்கள் துபாயில் இருந்து இத்தாலிக்குச் சென்று கொண்டிருக்கையில் அவர்களையும் நேற்று விமானம் முலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாகவும் அஜித் ரோகன தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team