ஊடகவியலாளர் முஷர்ரப்பை முடக்க நினைப்பதன் நோக்கம் என்ன? » Sri Lanka Muslim

ஊடகவியலாளர் முஷர்ரப்பை முடக்க நினைப்பதன் நோக்கம் என்ன?

musarraf

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வசந்தம் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் அதிர்வு நிகழ்ச்சி மூலம் ஊடகத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப்பிடித்திருக்கும் ஊடகவியலாளர் முஷர்ரப்பை அத் துறையில் இருந்து முடக்க சில அரசியல் சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பொது மக்களின் உளக்குமுறல்களோடு இரண்டற கலந்து தன் ஊடகவியல் துறையை நடுநிலையாக செவ்வேனே செய்து வரும் முஷர்ரப் போன்றவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்வுகள் பிரயோகிக்கபடுவதை ஊடகவியாளர்களினால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

ஊடகத்துறையானது மக்களின் அன்றாட செயற்பாடுகளோடு தொடர்புடையதாகும்.ஊடகவியல் எனும் போது அது மனிதர்களுக்கிடையில் கருத்துக்களை அல்லது தகவல்களை எடுத்துச் செல்கின்ற தொடர்பாடல் சம்மந்தப்பட்ட துறையைக் குறிக்கிறது.

ஊடகவியலானது சமுகத்தின்இருப்பு, சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பு,அரசியல் தத்துவம், விஞ்ஞானம், சட்டம், மருத்துவம் பொறியியல் என்று பல்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானகரமான சக்தியாக விளங்குகின்றது.நாட்டில் நடக்கும் செய்திகளை படித்த மேதை முதல் சாதாரண பாமரன் வரை தெளிவான ஒரு பார்வையோடு கொண்டு சேர்க்கும் ஒரு உன்னதமான பணியினை ஊடத்துறையானது ஆற்றி வருகின்றது.

ஊடகவியலாளர் ஒருவர் சுயாதீனமாக ஈடுபடுகின்ற போது அவர் பக்கம் அதிகாமான சவால்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.அதிலும் குறிப்பாக அதிகமான சவால்கள் அரசியல் ரீதியாகவே உருவாக்கப்படுகின்றது.ஒரு ஊடகவியாளர் அரசியலின் தற்கால போக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்ற போது அவருக்கான குழிபறிப்புகளும் ஆரம்பிக்கின்றன.

முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு முஷர்ரப் போன்ற நடுநிலையான ஊடகவியலாளர்களின் உருவாக்கமானது பெரும் தலையிடிகளையும்,பயத்தினையும் உருவாக்கியுள்ளது.சில அரசியல்வாதிகள் அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் அநியாயங்களை தெட்ட தெளிவாக வெளி உலகிற்கு கொண்டு வரும் முஷர்ரப் போன்ற ஊடகவியலாளர்களை அவ் அரசியல்வாதிகள் பழிவாங்கும் நிலை ஏற்படுகிறது.அரசியல் வங்குரோத்திற்காக முஷர்ரப் போன்ற நடுநிலையான ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படுவார்களானால் ஊடக தர்மமானது எதிர்காலத்தில் கடுகளவேனும் இல்லாமல் போய்விடும்.

அற்ப அரசியல் காரணங்களுக்காக ஊடகவியலாளர்கள் பலிக்கேடாவது நியாயமற்றதாகும்.முஷர்ரப் போன்ற ஊடகவியலாளர்களின் நடுநிலைத் தன்மையான சேவை ஊடகத்துறையில் நிலைத்திருக்க வேண்டும்.அவருக்கு எதிராக முன்னெடுக்கும் செயல்களை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்பதே அனைத்து ஊடகவியலாளர்களின் கோரிக்கையாகும்.

(அஹமட் மன்சில்)

Web Design by The Design Lanka