ஊரடங்கை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்குமாறு முன்னாள் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் கோரிக்கை..! - Sri Lanka Muslim

ஊரடங்கை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்குமாறு முன்னாள் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் கோரிக்கை..!

Contributors

தற்போதுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை குறைந்தது மேலும் 10 நாட்களுக்கு நீடிக்குமாறு முன்னாள் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் நிஹால் அபேசிங்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து நிபுணர்களின் சார்பாகவும் பேசுவதாகவும் மருத்துவர் அபேசிங்க குறிப்பிட்டார்.

வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி மட்டும் தெரிவாகாது என அவர் கூறினார்.

“நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்க அதிகாரிகள் முயன்றனர், அதனால் தான் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை நாங்கள் தவறவிட்டோம். அப்படித்தான் அந்த இறப்புகள் நிகழ்ந்தன” என்று அவர் குற்றம் சாட்டினார்.

Web Design by Srilanka Muslims Web Team