ஊருக்கு வந்தால் 'கவனியுங்கள்': விஜேதாச அழைப்பு..! - Sri Lanka Muslim

ஊருக்கு வந்தால் ‘கவனியுங்கள்’: விஜேதாச அழைப்பு..!

Contributors

கொழும்பு துறைமுக நகரத்துக்கான சட்டமூலம் நிறைவேற்றப்படுவது நாட்டைப் பெரும் ஆபத்துக்குள் தள்ளும் என தெரிவிக்கிறார் விஜேதாச ராஜபக்ச.

தனி நாடு போன்று இயங்கப் போகும் துறைமுக நகரத்துக்குள் இலங்கையின் சட்ட-திட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது என தெரிவிக்கின்ற அவர், இது இலங்கை எனும் தேசத்துக்குப் பேராபத்து எனவும் இதனை நிறைவேற்ற நாடாளுமன்றில் கை தூக்குபவர்களை மக்கள் நன்கு ‘கவனிக்க’ வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

தான் எந்த அரசில் இருந்தாலும் நியாயத்தின் பக்கம் நின்று குரல் கொடுப்பவன் எனவும் அவர் தெரிவிக்கின்றமையும் அவருக்கு வழங்காமல் போன அமைச்சுப் பதவியை தருவதற்கு ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team