ஊவாவில் எதிர்க்கட்சிகள் வெற்றி வெற்றால் கூட்டாட்சி அமைக்க திட்டம் - Sri Lanka Muslim

ஊவாவில் எதிர்க்கட்சிகள் வெற்றி வெற்றால் கூட்டாட்சி அமைக்க திட்டம்

Contributors
author image

Editorial Team

ஊவா மாகாணசபையின் ஆட்சியை கூட்டாக இணைந்து கைப்பற்றும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இன்றைய தினம் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியை விடவும் எதிர்க்கட்சிகள் கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டால், இவ்வாறு கூட்டு ஆட்சியை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த முயற்சியை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

 

தேர்தல் முடிவுகளின் பின்னர் ஜே.வி.பி மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

 

முதலமைச்சர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அமைச்சுப் பதவிகளை ஜே.வி.பி மற்றும் ஜனநாயகக் கட்சிக்கும் வழங்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

 

இறுதி முடிவுகள் வெளியானதன் பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.(gtn)

Web Design by Srilanka Muslims Web Team