ஊவாவும்,ஐக்கிய தேசிய கட்சியும்..!! - Sri Lanka Muslim
Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஊவா மாகாண சபையில்  கடந்த 10 வருட காலமாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் எதுவுமின்றி,முஸ்லிம்களிற்காய் குரல் கொடுக்க  நாதியற்றுக்கிடக்கிறது.இம்முறை எப்பாடு பட்டாவது பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள்.எனினும்,சில சுயநல வாதிகள் தங்கள் அரசியல் இலாபங்களுக்காய் மக்களை தவறான வழியில் நடாத்துவதனால் இம் முறையும் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு விடுமா ??என்ற அச்சமும் பலரினதும் உள்ளத்தில் எழத்தான் செய்துள்ளது.

 

கடந்த முறை முஸ்லிம்களின் கனிசமான வாக்குகள் ஐ.தே.க  இற்கு அளிக்கப்பட்ட போதும் ஐ.தே.க இல் களமிறங்கிய முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றி இற்கு விருப்பு வாக்கு முறைமை பெரும் சவாலாக அமைந்தது.இம்முறை முஸ்லிம் பிரதிநித்துவம் ஐ.தே .க மூலம் பாதுகாக்கப் பட ,முஸ்லிம்களின் விருப்பு வாக்குகள் சரியான விதத்தில் பகிரப்படல் வேண்டும் என்பது கடந்த கால தேர்தல் மூலம் கற்றுக்கொண்ட ஒரு படிப்பினையாகும்.இதனைக் கருத்திற் கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ‘பதுளை மாவட்டத்தில் அதிகம் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கக் கூடாது” என்ற கோரிக்கைக்கு அமைய  ஐ.தே.க சார்பாக இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை மாத்திரம் களமிறக்கியுள்ளதம்.

 

ஐ.தே.க சென்ற முறை முஸ்லிம் பிரதிநிதித்துவக் காப்பிற்கு சிறந்த வெற்றி வியூகங்களை வகுக்க வில்லை என்பதை  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இக் கோரிக்கை தெளிவாக புலனாக்குகின்றது.சென்ற முறை எமது நலனில் அக்கரை  கொள்ளாத இக் கட்சியை,முதலில் நாம் நம்பலாமா??என்பதை மக்களாகிய நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.சென்ற முறை முஸ்லிம்கள் மீது  இல்லாத அக்கரை இம்முறை ஐ.தே.க எழுந்திருப்பது முஸ்லிம்களை வைத்து தங்களது அரசியல் லாபங்களுக்கான காய் நகர்த்தலை மேற்கொள்ள என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

 

மேலும்,விருப்பு வாக்கு முறைமையின் பிரகாரம் ஒருவர் மூவருக்கு வாக்களிக்கலாம்.உண்மையில் ஐ.தே.க முஸ்லிம் பிரதிநிதித்துவக் காப்பில் அக்கரை கொண்டிருப்பின் 3 வேட்பாளர்களை அல்லவா??களமிறக்கி இருக்க வேண்டும்.முஸ்லிம்கள் மூவர் களமிறக்கப்பட்டு மூவருக்குமிடையில் முஸ்லிம்களின் விருப்பு வாக்குகள் பகிரப்பட்டால்.எங்கே?மூவரும் தெரிவு செய்யப்பட்டு பேரினப் பிரதிநிதித்துவத்திற்கு சவாலாக அமைந்து விடுமோ என ஐ.தே.க இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை மாத்திரம் களமிறக்கி  பேரின பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க முயற்சித்துள்ளதை தெளிவாக காட்டுகிறது.இப்படியான இந்த வேட்பாளர் களமிறக்கல் வியூகத்தை நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி உரிமை கோரி இருப்பது நகைப்பிற்குரியது.

 

முஸ்லிம் கட்சிகளின் கூட்டின் மூலம் இரு உறுப்பினர்களை பெறுவது மிகவும் சவாலானது.முஸ்லிம்கள் யாவரும் ஒன்றிணையும் போதே இரு உறுப்பினருக்கான வாக்குகளை நிச்சயப்படுத்தி பெறக் கூடியதாக இருக்கும்.ஆனால்,முஸ்லிம்கள் யாவரும் முஸ்லிம் கட்சிக் கூட்டில் ஒன்றிணைவது சாத்தியமற்ற ஒன்று.எஞ்சுகின்ற ஆசனங்களின் அடிப்படையில் ஒரு ஆசனம்  கிடைத்தால் மட்டுமே இரு உறுப்பினர்களை முஸ்லிம் கட்சிகளின் கூட்டில் பெறக் கூடியதாக இருக்கும்.

 

ஐ.தே.க இல் களமிறங்கியுள்ள இருவருக்கும் பதுளை மாவட்ட  முஸ்லிம்கள் ஓரளவு ஒன்றிணைந்து வாக்களிக்கும் போதே  தங்களது இரு உறுப்பினர்களையும் முஸ்லிம்கள் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத ஓர் உண்aமைதான்..

 

ஜே.வி.பி யை பொறுத்த மட்டில் கடந்த முறை பதுளை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை மாத்திரமே பெற்றிருந்தது.அவ்வாறு தெரிவாகியவர் 2000 இற்கும் குறைவான விருப்பு வாக்குகளையே பெற்றிருந்தார்.எனினும்,ஜே.வி.பி புதிய தலைவருடன் தென்,மேல் மாகாண சபைகளில் முன்பை விட அதீத ஆசனங்களையும் தன் வசப் படுத்தியுள்ளமையைப் பார்க்கும் போது இத் தேர்தலிலும் அதிக ஆசனங்களை பெறலாம் என்றே நம்பப்படுகிறது..இரண்டிற்கு மேற்பட்ட ஆசனங்களை ஜே.வி.பி தன்  வசப் படுத்துமாக இருந்தால் ஐ.தே.க யை விட தனது இரு உறுப்பினர்களை முஸ்லிம்கள் தனதாக்க விருப்பு வாக்கு குறைவாக தாக்கம் செலுத்தும் ஜே.வி.பி யே சிறந்த தெரிவாக அமையும்.

Web Design by Srilanka Muslims Web Team