ஊவா தேசிய விளையாட்டு மைதானம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு! - Sri Lanka Muslim

ஊவா தேசிய விளையாட்டு மைதானம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

Contributors
author image

Editorial Team

பதுளையில் அரசாங்கத்தினால் 4,500 மில்லியன் ரூபா செலவில்  நிர்மாணிக்கப்ப ட்டுள்ள ஊவா மாகாண தேசிய விளையாட்டுத் தொகுதி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது.

 

கிரிக்கெட், உதைபந்தாட்டம், நீச்சல் உள்ளிட்ட 25 விளையாட்டுக்களை நடத்தக்கூடியதாக இந்த விளையாட்டுத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி நேற்று உத்தியோகபூர்வமாக இதை திறந்து வைத்ததுடன் நேற்று மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுப் போட்டிகளையும் நேரில் பார்வையிட்டார்.

 

அமைச்சர்கள் பந்துல குணவர்தன, ஜீ. எல். பீரிஸ். நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்தானந்த அலுத்கமகே, முன்னாள் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
MT

Web Design by Srilanka Muslims Web Team