ஊவா தேர்தல்: வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் ஆரம்பம் - Sri Lanka Muslim

ஊவா தேர்தல்: வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் ஆரம்பம்

Contributors

ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் இன்று (29) ஆரம்பமாகியுள்ளன.

 

வாக்காளர் அட்டைகள் தேர்தல்கள் செயலகத்தால் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இன்று தொடக்கம் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி வரை வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும் என்றும் செம்டெம்பர் 7ஆம் திகதியான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளன்றும் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும் என்றும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

ஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team