ஊவா நிலைமைக்கு நிமால் சிறிபால டி சில்வாவே காரணம்: ஜனாதிபதி - Sri Lanka Muslim

ஊவா நிலைமைக்கு நிமால் சிறிபால டி சில்வாவே காரணம்: ஜனாதிபதி

Contributors
author image

Editorial Team

ஊவா தேர்தலில் அரசாங்கத்திற்கு சாதகமற்ற நிலைமையை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவே ஏற்படுத்தியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

 

தற்போது நடைபெற்று வரும் ஊவா மாகாண சபைத் தேர்தல் நிலைமைகள் சம்பந்தமாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலருடன் இன்று முற்பகல் கலந்துரையாடும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

 

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, புதியவர்கள் எவரையும் தேர்தலில் நிறுத்த இடமளிக்கவில்லை.

 

மேல் மாகாணத்தில் ஹிருணிகாவும் வடமேல் மாகாணத்தில் தயாசிறி ஜயசேகரவும் நிறுத்தப்பட்டனர்.

 

எனினும் ஊவாவில் போட்டியிடும் நபர்கள் பழையவர்கள், ஐக்கிய தேசியக் கட்சி ஹரின் பெர்ணான்டோவை தேர்தலில் நிறுத்தியதே எமக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

எது எப்படியிருந்தாலும் நாம் இத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பது நிச்சயமானது.

 

பதுளையில் குறைந்தது 48 வீத வாக்குகள் கிடைக்கும், மொனராகலையில் 58 வீத வாக்குகள் கிடைக்கும், இதனால் பயப்பட வேண்டியதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.(LW)

Web Design by Srilanka Muslims Web Team