ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம் - Sri Lanka Muslim

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்

Contributors
author image

Editorial Team

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுநேரத்திற்கு முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

 

காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணிவரை 832 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

 

இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஒன்பது இலட்சத்து 42  ஆயிரத்து 730  பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

 

பதுளை மாவட்டத்தில் 6 இலட்சத்து ஒன்பதாயிரத்து 966 வாக்காளர்களும், மொனராகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 764 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

 

மொனராகலை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியற்கட்சிகளும், 07 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

 

மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளின் ஊடாக 14 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

 

மொனராகலை மாவட்டத்தில் 318 மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

 

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் 09 தேர்தல் தொகுதிகளின் ஊடாக 18 உறுப்பினர்கள் மாகாண சபைக்குத் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

 

பதுளை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியற்கட்சிகளும், 04 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

 

இதேவேளை, தேர்தலில் வாக்களிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டுவருவது கட்டாயமானது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

 

எவ்வித அசௌகரியங்களையும் ஏற்படுத்தாது, உரிய நேரத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதந்து வாக்குகளை பதிவுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team