ஊவா மாகாண சபையை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியதன் பின்னர், நிலைமைகள் முற்றாக மாறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்- ரணில் விக்கிரமசிங்க - Sri Lanka Muslim

ஊவா மாகாண சபையை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியதன் பின்னர், நிலைமைகள் முற்றாக மாறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்- ரணில் விக்கிரமசிங்க

Contributors
author image

Editorial Team

ஊவா மாகாணத்தின் பெருந்தோட்ட மக்களுக்கு கடந்த 10 வருடங்களாக வழங்கப்படாத சலுகைகள், ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாகம் ஏற்படுத்தப்படும் பட்சத்தில், துரிதமாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

அண்மையில், ஹாலியல்ல தேர்தல் தொகுதியின் ஸ்பிரிங்வெலி பெருந்தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

இதுதவிர, பெருந்தோட்ட பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் பின்னடைந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தினார்.

 

எதிர்வரும் 20ஆம் திகதி ஊவா மாகாண சபையை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியதன் பின்னர், நிலைமைகள் முற்றாக மாறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(sfm)

Web Design by Srilanka Muslims Web Team