எகிப்தில் நடைபெறும் காலநிலை மாநாட்டில் நஸீர் அஹமட் பங்கேற்க தீர்மானம்! - Sri Lanka Muslim

எகிப்தில் நடைபெறும் காலநிலை மாநாட்டில் நஸீர் அஹமட் பங்கேற்க தீர்மானம்!

Contributors

எகிப்தில் நடைபெறவுள்ள காலநிலை மாட்டில் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் பங்கேற்கவுள்ளார்.

உலகின் பல தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் சுற்றாடலுடன் தொடர்புடைய புத்திஜீவிகள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் பல்வேறு விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

கொழும்பிலுள்ள எகிப்திய தூதுவர் மேஜ்ட்மொஷ்லி இதற்கான அழைப்பிதழை கடந்த சனிக்கிழமை அமைச்சரிடம் கையளித்தார். தூதுவரின் தனியார் வாசஸ்தலத்தில் நடந்த இச்சந்திப்பில் பல்வேறு விடயங்கள்குறித்து இவ்விருவரும் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் Dr அனில் ஜெயசிங்க, ஐநா நிரந்தர வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்தி, பிரித்தானிய தூதுவர் சரா ஹல்டன், பேராசிரியர் சஜ்யு மெண்டிஸ், அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் றிசா வதூத் ஆகியோரும் பங்கேற்றனர்.

காலநிலை மாற்றத்தால் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமைச்சர் இதன்போது விரிவாக விளக்கியதுடன், இச்சவால்களை இல்லாதொழிக்கும் இலங்கையின் வேலைத்திட்டங்களுக்கு மாநாட்டின் ஒத்துழைப்பையும் கோரியிருந்தார்.

அத்துடன் இந்த மாநாட்டில் இலங்கையின் பிரதான வகிபாகம் குறித்து விளக்கிய அமைச்சர் நசீர் அஹமட், இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு இலங்கை தன்னை தயார்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். தனியார் துறையினர் மற்றும் முதலீட்டாளார்களை காலநிலை மாற்றத்தின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் வேலைத்திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கும் இதனூடாக மக்களுக்கு உதவுதற்கான செயன்முறை குறித்தும் அமைச்சர் இந்த சந்திப்பில் எடுத்துரைத்தார்.

எதிர்வரும் நவம்பர் 07 முதல் 18 வரை எகிப்தின் ஷார்ம்அல்ஷேக் ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. ஐ,நாவின் காலநிலை மாநாடு ‘nfhg; 27″ கோட்பாடுகளின் தொனிப்பொருள் அடிப்படையில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.உலகின் பல நாடுகளின் சுற்றாடல் அமைச்சர்கள் இதில் பங்கேற்பர்.

Web Design by Srilanka Muslims Web Team