எகிப்தில் புகையிரத விபத்தில் 35 பேர் மரணம் - 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம்..! - Sri Lanka Muslim

எகிப்தில் புகையிரத விபத்தில் 35 பேர் மரணம் – 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம்..!

Contributors

எகிப்தில் இரண்டு புகையிரதங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 35க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

எகிப்தின் தென்பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 100 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடம்புரண்ட பெட்டிகளையும் உள்ளே சிக்குண்டுள்ள பயணிகளையும் எகிப்திய  ஊடகங்கள் காண்பித்துள்ளன.

சிலர் மயக்கமடைந்த நிலையில் காணப்படுவதையும் சிலர் குருதிக்காயங்களுடன் காணப்படுவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team