எகிப்து: அமைதி ஆர்பாட்டம் செய்த பெண்களுக்கு 11 வருட சிறை ! - Sri Lanka Muslim

எகிப்து: அமைதி ஆர்பாட்டம் செய்த பெண்களுக்கு 11 வருட சிறை !

Contributors

-ஏ.அப்துல்லாஹ்- 

எகிப்தில் அமைதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுமிகள் உட்பட  ஒரு தொகுதி பெண்களை எகிப்தின் இராணுவ நிர்வாகம் வதைமுகாம்களில் தடுத்து வைத்துள்ளதுடன் பதினொரு ஆண்டுகள் சிறை தண்டனையையும் தீர்ப்பாக வழங்கியுள்ளது .

எகிப்தில் இடம்பெற்ற  இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக அலெக்சாண்ரியாவில் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிபடுத்திய பெண்கள் குழுவுக்கு  இந்த கடுமையான அடக்குமுறை மிக்க தண்டனையை வழங்கப்பட்டுள்ளது . இந்த பெண்கள் குழுவில உள்ள  சிறுமிகள்  அவர்கள் தண்டனைக்குரிய சட்டரீதியான வயதை அடையும்வரை தடுப்புமுகாம் ஒன்றில் வைக்கப்படவுள்ளனர். என்றும் சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றது .

‘பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம்’ என்ற பேரில் இஹ்வாங்களின்  ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை எகிப்தின் இராணுவ பொம்மை நிர்வாக இடைக்கால ஆட்சியாளர்கள் கைதுசெய்து   தடுத்துவைத்து சித்திரவதை செய்வதுடன் படுகொலையும்  செய்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team