எகிப்து ஜனாதிபதி தேர்தலில் ராணுவ தளபதி போட்டியிடுவது உறுதி - Sri Lanka Muslim

எகிப்து ஜனாதிபதி தேர்தலில் ராணுவ தளபதி போட்டியிடுவது உறுதி

Contributors

 

-எகிப்து-

எகிப்து நாட்டில் முகமது முர்சியின் ஆட்சி கலைக்கப்பட்டதும் ராணுவ தளபதி மார்ஷல் அப்துல் பத்தாஹ் எல்–சிசி அதிகாரத்தை கைப்பற்றினார். அங்கு ஜனாதிபதி தேர்தலை பிப்ரவரி 17–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 18–ந்தேதிக்குள் முடிக்க கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் ராணுவ தளபதி சிசி போட்டியிடுவார் என்று பரவலாக கருத்து கூறப்பட்டது.

 

 

இந்த யூகத்தை இப்போது தளபதியே உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘என்னை போட்டியிட எகிப்து மக்களிடம் இருந்து பலமுனையிலும் கோரிக்கை வருகிறது. மக்களின் விருப்பத்தை நான் புறக்கணிக்க மாட்டேன். எனக்கு வேறுவழி இல்லை. மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் சுதந்திரமாக ஓட்டுப்பதிவு நடைபெறும்’ என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team